search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்ஜிக்கல் ஸ்டிரைக்"

    புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா சார்பில் இன்று பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். #IndianMoviesBannedinPakistan
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரி வந்தனர். இந்த நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாங்களை குறிவைத்து இந்திய விமானப்படை விமானங்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

    இந்த நிலையில், இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தான் திரைப்பட விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்திய படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்று பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை மந்திரி சவுத்ரி ஃபவாத் ஹூசைன் தெரிவித்துள்ளார். இந்திய விளம்பரங்களை புறக்கணிக்கவும் பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.



    முன்னதாக பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அனைத்து இந்திய திரை தொழிலாளர் சங்கம், இந்திய திரையுலகில் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த திரைப்பட கலைஞர்களும் பணியாற்ற முடியாது என்று தடை விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #PulwamaAttack #IndianMoviesBannedinPakistan

    சர்ஜிக்கல் ஸ்டிரைக் பாணியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தியதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சூசகமாக தெரிவித்துள்ளார். #RajnathSingh #SurgicalStrikes
    முசாபூர்நகர்:

    காஷ்மீரில் கடந்த 18-ந் தேதி சம்பா மாவட்ட எல்லைப் பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. அதில் நரேந்திர சிங் என்ற ராணுவ வீரர் உயிர் இழந்தார்.

    பாகிஸ்தான் வீரர்கள் எல்லை தாண்டி வந்து நரேந்திர சிங்கின் உடலை இழுத்துச் சென்றனர். தங்கள் பகுதியில் வைத்து அவரது கழுத்தை அறுத்து கொடூர செயலில் ஈடுபட்டனர்.

    மறுநாள் 19-ந்தேதி அவரது உடலை எல்லைப் பாதுகாப்பு படையினர் மீட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் மீது இந்தியா பல்வேறு நிலைகளில் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டது.

    இந்த நிலையில் நரேந்திர சிங் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்த வார தொடக்கத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் அதிரடியாக புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இது இந்தியா நடத்தியிருக்கும் 2-வது துல்லிய தாக்குதல் ஆகும்.

    இந்த தகவலை உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று சூசகமாக வெளியிட்டார். முசாபூர் நகரில் பகவத்சிங் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-


    பாகிஸ்தான் நாட்டுக்கு பயங்கர பதிலடியை நமது ராணுவம் கொடுத்துள்ளது. சில அதிரடிகள் நடந்துள்ளன. எதிரிகளுக்கு பயங்கர இழப்பு ஏற்பட்டுள்ளது. அது என்ன என்ற விவரத்தை என்னால் இப்போது முழுமையாக சொல்ல முடியாது.

    இன்னும் 2 நாட்களில் என்ன நடந்தது என்பது பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிய வரும். அப்போது நமது ராணுவம் எப்படி நடந்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்வீர்கள். எதிர் காலத்திலும் என்ன நடக்க போகிறது என்பதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

    பாகிஸ்தான் நமது பக்கத்து நாடாகும். நாம் அவர்களுடன் தோழமை உணர்வுடன்தான் இருக்கவே விரும்புகிறோம். எனவே எல்லையில் எந்த காரணத்தை கொண்டும் முதலில் நாம் தாக்குதலை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறேன்.

    ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எல்லை மீறி ஊடுருவி வந்து தாக்குதல் நடத்தினால் மிகப்பயங்கர பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளேன். எதைப்பற்றியும் யோசிக்காமல் சுட்டுக் கொல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவர்கள் தரப்பில் இருந்து ஒரு தோட்டா வந்தால் நமது தரப்பில் இருந்து பல தோட்டாக்கள் பாய வேண்டும் என்று ராணுவ வீரர்களிடம் சொல்லப்பட்டு உள்ளது. துப்பாக்கி குண்டுகள் எண்ணிக்கை பற்றி கவலைப்படாமல் பதிலடி கொடுக்க கூறி உள்ளோம்.

    சீனாவும் நமது எல்லையில் ராணுவத்தை பயன்படுத்தாமல் நெருக்கடி கொடுத்தது. ஆனால் அதிலிருந்து அவர்கள் இந்தியா பலவீனமான நாடு அல்ல என்பதை புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

    எனவே எல்லையில் நமது ராணுவம் மூலம் பதிலடிகள் உடனுக்குடன் கொடுக்கப்படும். எல்லை தாண்ட நினைப்பவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும்.

    இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார். #RajnathSingh #SurgicalStrikes
    சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற ராணுவ நடவடிக்கைகளை, அரசியல் ஆதாயத்திற்காக பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. #surgicalstrike
    புதுடெல்லி :

    காஷ்மீரில் ஊடுருவிய பயங்கரவாதிகள் உரி பகுதியில் நடத்திய திடீர் தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா இதற்கு பதிலடி கொடுக்கும் என பிரதமர் மோடி எச்சரித்ததை தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இந்திய வீரர்கள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.

    இந்த தாக்குதல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, அதற்கான ஆதாரங்கள் அடங்கிய வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் சென்று இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியயது என இந்தியா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தும், பாகிஸ்தான் அரசு அதை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் இந்திய ராணுவத்தின் உதவியுடன் இந்த வீடியோக்கள் நேற்று வெளியாகியுள்ளன.


    இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜீவாலா பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    பா.ஜ.க அரசு வாக்குகளுக்காக ராணுவ வீரர்களின் ரத்தத்தையையும் தியாகத்தையும் வைத்து அரசியல் பிரச்சாரம் செய்யும் போக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கைகளை உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தல் அரசியலுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பா.ஜ.க பயன்படுத்தியது. அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க தற்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோக்களை மீண்டும் வெளியிட்டுள்ளது.

    ஒருபக்கம், ராணுவத்தின் வெற்றியை மட்டும் தங்களது வெற்றியாக பாவித்துக்கொள்ளும் அரசு , மறுபக்கம் சரிவர ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் இந்த அரசு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இயலாமை நிலையில் உள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்சியில் அதிகப்படியான ராணுவ வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த அரசு, சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் நமது பாதுகாப்பு அமைப்பிற்கு ஆபத்தை உண்டாக்குகிறதா? ரகசிய நடவடிக்கைகளின் ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட்டு வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயல்கிறதா?  பா.ஜ.க.வினர் தேர்தலில் வாக்குகளை பெற வீரர்களை அரசியல் தீவனமாக பயன்படுத்துகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #surgicalstrike
    ×